செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

NOKIA SYMBIAN இயங்குதளம் கொண்ட கைத்தொலைபேசியின் ROOT ACCESS பெற்றுக்கொள்வது எப்படி???

               இன்று உலகில் பரவலாக NOKIA கைத்தொலை பேசியானது பாவனையில் உள்ளது.ஆனால் நீங்கள் SYMBIAN இயங்கு தளம் கொண்ட NOKIA கைத்தொலை பேசியை உபயோகிப்பவராக இருந்தால் சில நேரங்களில் உங்களுக்கு தேவையான APPLICATIONகளை பதிவிறக்கம் செய்து அல்லது FILE MANAGER ஊடக இன்ஸ்டால் செய்யும் போது "EXPIRED CERTIFICATE","CERTIFICATE ERROR CONTACT THE APPLICATION SUPPLIER"  போன்றசில எச்சரிக்கை சமிஞ்சைகள் தோன்றலாம்.இப்படித்தோன்றும் போது உங்களால் விரும்பப்படுகின்ற APPLICATIONSகள் இன்ஸ்டால் செய்ய முடியாது.இதன் போது நீங்கள் இந்த INSTALLATION FILEல் ஏதோ பிரச்சினை இதற்கு தீர்வில்லை என்றெண்ணி நீங்கள் முயற்சியை கைவிடுவீர்கள் .இதன் போது உங்களுக்கு சிறிது மன வருத்தத்தை தரலாம்.

              ஆனால் உண்மையில் இந்த பிரச்சினையை உங்களால் தீர்க்க முடியும்.அதற்கு முன்பு  "EXPIRED CERTIFICATE","CERTIFICATE ERROR CONTACT THE APPLICATION SUPPLIER" போன்றவை என்னவென்று சிறிது பார்போம்.முதலில்....

"EXPIRED CERTIFICATE" என்றால் என்ன???

                 SYMBIAN இயங்குதளங்களுக்கான எல்லா APPLICATIONகளிலும் அந்த APPLICATIONகளுக்கான சான்றிதழ்(CERTIFICATE) NOKIA நிறுவனத்தால் வழங்கபடுகிறது.இந்த சான்றிதழ் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கான அனுமதியாக அந்த APPLICATIONகளில் நிறுவப்படுகிறது.அல்லது சில தனி மனிதர்களால் போலியாக உருவாக்கப்படுகிறது.இந்த சான்றிதழ் காலாவதியாகும் போது இத்தகையா ERRORகள் உருவாகின்றது.ஆனால் உங்களால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.


            உதாரணமாக BLACKBALLER PRO(இது உள்வரும் அழைப்புக்களை வேண்டியவர் அழைப்பு வேண்டாதவர் அழைப்பு போன்று மட்டுப்படுத்த உதவுகிறது.) என்ற APPLICATIONஐ INSTALL செய்யவேண்டுமாக இருந்தால்  முதலில் நாம் USB மூலமாக அல்லது BLUETOOTH மூலமாகவோ அந்த APPLICATIONஐ உங்கள் MOBILEல் பதிவு செய்தாபின்னர் சாதரணமாக INSTALL செய்தால் உங்களால்  மேற்கண்ட ERROR MESSAGEஐ பார்க்கலாம்.ஆனால் நீங்கள் பின்வரும் முறையை பின்பற்றி இன்ஸ்டால் செய்வீர்கள் என்றால் உங்களால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.

               முதலில் நீங்கள் DATE AND TIME SETTINGSக்கு செல்லுங்கள் அதில் வருடத்தை 2010என மாற்றம் செய்யுங்கள்.அதாவது DATEஐ பின்னோக்கி செலுத்துங்கள்.பின்னர் நீங்கள் மீண்டும் உங்கள் APPLICATIONஐ இன்ஸ்டால் செய்து பாருங்கள்.இப்போது உங்கள் APPLICATION இம்முறை ஏதும் சிக்கல் இன்றி இன்ஸ்டால் ஆகும்.(INSTALL செய்து முடித்ததும் பழைய நிலைக்கு DATEஐ மாற்றிக்கொள்ளுங்கள்)இது எவ்வாறு நிகழந்தது என்று பார்த்தீர்கள் ஆனால்  BLACKBALLER PRO என்ற இந்த APPLICATION 2010ஆம் வருடத்துடன் முடிவடைகின்றது.நீங்கள் உங்களின் DATE SETTINGஐ பின்னோக்கி செயல் படுத்தும் போது அது தானாக VALIDATE CERTIFICATE ஆக மாறுகின்றது.ஆகையால் உங்கள் APPLICATION தானாக இயங்கும் அனுமதியை இயங்குதளத்திலிருந்து பெறுகின்றது. 

              இப்போது நீங்கள் மீண்டும் MEDIA SAFE என்ற ஒரு APPLICATIONஐ 2010ம் ஆண்டில் வைத்து இன்ஸ்டால் செய்து பாருங்கள் மீண்டும் உங்களால் EXPIRED CERTIFICATEஐ காண முடியும்.நடந்தது என்ன??? மீண்டும் ஒரு பதிவில் பார்ப்போம் தீர்வை...............



download link for BlackBaller Pro
http://gallery.mobile9.com/f/2743363/?ref=2079
media safe download link
http://gallery.mobile9.com/f/332694/




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக