திங்கள், 11 ஏப்ரல், 2016

இலவசமாக திரைப்படங்களை iphoneல் காண்பது எப்படி ???

               
இலவசமாக திரைப்படங்களை iphoneல் காண்பது எப்படி ???





                 
உங்கள் IPHONEல் இலவசமாக திரைப்படங்களை காண்பது எவ்வாறு என்று கீழுள்ள காணளொளியை காண்பதன் ஊடக கண்டு கொள்ளலாம்.PlayBox HD எனப்படும் ஒரு மென்பொருள் கணினியில் திரைப்படங்களை காணும் அனுபவத்திலிருந்து வேறுபட்டு மொபைல் திரயினூடாக காணும் ஒரு புது வித அனுபவத்தை பெற்றுத்தரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.இதில் உங்களுக்கு பிடித்த்த திரைப்படங்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் மேம்பட்ட வசதி உள்ளதும் ஒரு சிறப்பம்சமாகும்.






வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

Certificate may not yet be valid தீர்வு 


              சென்ற பதிவில் EXPIRED CERTIFICATE பற்றிப் பார்த்தோம்.இந்தப்பதிவில் certificate may not yet be valid பற்றி சிறிது ஆராய்வோம்.ஒவ்வொரு SYMBIAN APPLICATIONக்கும் CERTIFICATE காலாவதியாவது போன்று CERTIFICATE ஆரம்பிக்கும் திகதியும் உண்டு.அதாவது BLACK BALLER PROஇன் CERTIFICATE 21/05/2010இல் இருந்து ஆரம்பிக்கிறது.உங்கள் மொபைல்இல் மதமும் வருடமும் சரியானதா இருந்து திகதி மாற்றமாக இருந்தால் கூட உங்கள் APPLICATIONஐ இன்ஸ்டால் செய்யமுடியாது(20/05/2010)இதற்கு நீங்கள் அதன் சரியான ஆரம்ப திகதிக்கோ அல்லது காலவரயாரைன திகதிக்கோ  மாற்றுவதன் மூலம் உங்களுக்கு இதை தீர்வு செய்து கொள்ள முடியும்.

              தவறுக்கு வருந்துகிறேன் நான் பதிவேற்றம் செய்திருந்த BALACK BALLER PROவை நீங்கள் இன்ஸ்டால் செய்த்ருந்தால் கீழ்க்கண்ட செய்தி உங்களுக்கு கிடைத்திருக்கும்.இதற்கான காரணத்தை இன்னுமொரு பதிவில் விளக்குகிறேன்.


               சரி நீங்கள் சில APPLICATIONஐ அழித்து விட்டு தேவை ஏற்படும் நேரத்தில் இன்ஸ்டால் செய்ய நேரிடலாம்.அப்போது நீங்கள் ஒவ்வொரு முறையும் DATEஐ மாற்றம் செய்யும் போது உங்களுக்கு சிலவேளை எரிச்சலூட்டலாம்.இப்படியான APPLICATIONகளுக்கான சரியான CERTIFICATEகள் நீங்கள் அவற்றில் உள்ளீடு செய்வதன் மூலம் உங்களுக்கு இவற்றில் இருந்து நீங்கள் விடுபடலாம்.இவற்றை நான் கீழ்காணும் கானலோளியில் MEDIA SAFEஐ இன்ஸ்டால் செய்வது பற்றி விரிவாக விபரித்துள்ளேன். 






     இப்பதிவுடன் உங்களுக்கு EXPIRED CERTIFICATEஇன் தொல்லை ஒழிந்தது.புதிய CERTIFICATE உள்ளீடு செய்யப்பட SETUP FILEஐ பாதுகாப்பாக கணனியில் சேமித்துக்கொள்ளுங்கள்.மீண்டும் ஒரு பதிவில் ""cERTIFICATE ERROR CONTACT THE APPLICATION SUPPLIER" ஐ பற்றிப் பார்போம்.

FREE SIGNER உங்களுக்கு பதிவிறக்கம் செய்ய கீழ் காணும் LINKஐ சொடுக்குக

வியாழன், 16 ஆகஸ்ட், 2012


ANDROID ஒரு அறிமுகம்.

                கடந்த 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட புதிய மொபைல் போன்களின் வரவானது குறிப்பிடத்தக்கது.14 ஆண்டுகள் மொபைல் உலகில் ஜாம்பவானாக இருந்த நோக்கியா நிறுவனம் புதிய மொபைல்களின் வரவால் ஆட்டம் கண்டது என்பது ஒரு கசப்பான உண்மை என்றால் மிகையாகாது .அந்தளவு சென்றவருடம் புதியவரவுகள் புதிய மேம்படுத்தப்பட்ட இயங்குதளங்களுடன் சந்தையில் வெளியாகின.


          கடந்த ஆண்டு மொபைல் போன்களின் விமர்சகர்களால் அதிகமாக பேசப்பட்டது இரண்டு இயங்குதளங்களை பற்றியாகும்.IOS 4  VS  ANDROID 2.3.
அந்தளவு இந்த இரண்டு இயங்கு தளங்களும் மொபைல் உலகில் செல்வாக்கு செலுத்தின.இதில் IOS APPLE நிறுவனத்தின் பிரத்தியோகாக இயங்கு தளமாகவும் ANDROID GOOGLE நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட இயங்கு தளமாகவும் விளங்கியது.கீழே சில ANDROIDஐ மையமாக வைத்து வெளிவந்த சில MOBILE போன்கள்  

  1. HTC THUNDERBOLT
  2. LG NITRO HD
  3. HTC SENSATION 4G
  4. SAMSUNG GALAXY S2
  5. T-MOBILE G2X
  6. HTC REZOUND இவற்றுள் கடந்த ஆண்டுக்கான சிறந்த மொபைல் போன் விருதை KOREA நிறுவனமான SAMSUNG SAMSUNG GALAXY S2 MOBILE மூலம் தட்டிச்சென்றது. 


             இந்த இரண்டு இயங்குதளங்களையும் மையப்படுத்தி பலவிதமான SOFTWAREகள் சந்தையில் வெளிவந்தன இவற்றுள்  பிரதானமானது VOICE COMMANDSஐ அடிப்படையாக வைத்து APPLE நிறுவனம் SIRI என்ற APPLICATIONஐயும் SAMSUNG நிறுவனம் VOICE TALK APPLICATIONஐயும் வெளியிட்டது.இவற்றுள் ஆப்பிள் நிறுவனத்தின் SIRIஐ விடவும் சாம்சுங் நிறுவனத்தின் VOICE TALK சிறந்த பயனை தந்தது.கீழ் உள்ள கானளொளியை காண்பதன் மூலம் உங்களுக்கு மேலும் விளங்கிக் கொள்ள முடியும்.



       ANDROIDஇன் மேலதிக விபரங்கள் அறிய விரும்பினால் கீழ் உள்ள LINKஐ சொடுக்குக 
ADDITIONAL INFORMATION

   உங்களிடம் ஒரு SAMSUNG GALAXY S2 மொபைல் இருந்தால் மேம்படுத்தப்பட்ட S VOICE APPLICATIONஐ இன்ஸ்டால் செய்து பாருங்கள்.
http://www.mediafire.com/?8a1wyku4k7g8aih


               உங்களுக்கு ANDROID இயங்குதளத்தை கணனியில் மொபைல் போன்று பயன்படுத்த ஆசை உண்டா???எதிர்பாருங்கள் என் அடுத்த பதிவை........

புதன், 15 ஆகஸ்ட், 2012

EXPIRED CERTIFICATE பதிவு 2

               கடந்த பதிவில் EXPIRED CERTIFICATE பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம்.அதன் பின் நீங்கள் MEDIA SAFEஐ இன்ஸ்டால் செய்து பார்த்து இருந்தீர்கள் என்றால் மீண்டும் உங்களுக்கு EXPIRED CERTIFICATE ERROR செய்தி உங்களுக்கு கிடைத்திருக்கும்.

                நீங்கள் MEDIA SAFE APPLICATIONஐ இன்ஸ்டால் செய்யும் முன்னர் மீண்டும் ஒரு முறை DATE AND TIMEல் மாற்றம் செய்து பாருங்கள்(அதாவது ஒவ்வொரு ஆண்டாக பின்னோக்கி இன்ஸ்டால் செய்து பாருங்கள்.2009/2008/2007)உங்களால் இப்போது இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

                  ஆம் நீங்கள் 2007ஆம் ஆண்டுக்கு மாற்றம் செய்தவுடன் உங்களுக்கு MEDIA SAFEஐ இன்ஸ்டால் செய்யும் ACCESS கிடைக்கும்.மீண்டும்அதற்கான கரணம் என்ன வென்று ஆராய்ந்தீர்கள் என்றால் சில விடயங்கள் உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.அதாவது MEDIA SAFEஇன் LICENCE VERIFICATION 2007ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.நீங்கள் உங்கள் DATEஇல் மாற்றம் செய்தவுடன் உங்களுக்கான அனுமதியை இயங்குதளம் அளிக்கின்றது.கீழ் உள்ள வீடியோ பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
               இதே போன்று பலதரப்பட்ட APPLICATIONகள் EXPIRED CERTIFICATEஉடன் இணையத்தில் உலவுகின்றன இவற்றை நீங்கள்  தரவிறக்கம் செய்து  DATEஐ மாற்றம் செய்யும் முறை மூலம் INSTALL செய்து கொள்ள முடியும்.(ஆனால் DATE ஐ மாற்றாமல் இன்ஸ்டால் செய்யும்  நிரந்தர தீர்வும் உண்டு.அது பற்றி தனி ஒரு பதிவில் பேசுவோம்.)

           இப்போது நீங்கள் 2007ஆம் ஆண்டுக்கு DATEஐ மாற்றம் செய்த பிறகு மீண்டும் ஒருமுறை BLACKBALLER PROவை இன்ஸ்டால் செய்து பாருங்கள் உங்களுக்கு மேற்கண்ட படத்தில் உள்ளது போன்று ஒரு செய்தி தோன்றும்.இதற்கான தீர்வைப்  பற்றி அடுத்த பதிவில் பேசுவோம் 

BLACKBALLER PRO


செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

NOKIA SYMBIAN இயங்குதளம் கொண்ட கைத்தொலைபேசியின் ROOT ACCESS பெற்றுக்கொள்வது எப்படி???

               இன்று உலகில் பரவலாக NOKIA கைத்தொலை பேசியானது பாவனையில் உள்ளது.ஆனால் நீங்கள் SYMBIAN இயங்கு தளம் கொண்ட NOKIA கைத்தொலை பேசியை உபயோகிப்பவராக இருந்தால் சில நேரங்களில் உங்களுக்கு தேவையான APPLICATIONகளை பதிவிறக்கம் செய்து அல்லது FILE MANAGER ஊடக இன்ஸ்டால் செய்யும் போது "EXPIRED CERTIFICATE","CERTIFICATE ERROR CONTACT THE APPLICATION SUPPLIER"  போன்றசில எச்சரிக்கை சமிஞ்சைகள் தோன்றலாம்.இப்படித்தோன்றும் போது உங்களால் விரும்பப்படுகின்ற APPLICATIONSகள் இன்ஸ்டால் செய்ய முடியாது.இதன் போது நீங்கள் இந்த INSTALLATION FILEல் ஏதோ பிரச்சினை இதற்கு தீர்வில்லை என்றெண்ணி நீங்கள் முயற்சியை கைவிடுவீர்கள் .இதன் போது உங்களுக்கு சிறிது மன வருத்தத்தை தரலாம்.

              ஆனால் உண்மையில் இந்த பிரச்சினையை உங்களால் தீர்க்க முடியும்.அதற்கு முன்பு  "EXPIRED CERTIFICATE","CERTIFICATE ERROR CONTACT THE APPLICATION SUPPLIER" போன்றவை என்னவென்று சிறிது பார்போம்.முதலில்....

"EXPIRED CERTIFICATE" என்றால் என்ன???

                 SYMBIAN இயங்குதளங்களுக்கான எல்லா APPLICATIONகளிலும் அந்த APPLICATIONகளுக்கான சான்றிதழ்(CERTIFICATE) NOKIA நிறுவனத்தால் வழங்கபடுகிறது.இந்த சான்றிதழ் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கான அனுமதியாக அந்த APPLICATIONகளில் நிறுவப்படுகிறது.அல்லது சில தனி மனிதர்களால் போலியாக உருவாக்கப்படுகிறது.இந்த சான்றிதழ் காலாவதியாகும் போது இத்தகையா ERRORகள் உருவாகின்றது.ஆனால் உங்களால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.


            உதாரணமாக BLACKBALLER PRO(இது உள்வரும் அழைப்புக்களை வேண்டியவர் அழைப்பு வேண்டாதவர் அழைப்பு போன்று மட்டுப்படுத்த உதவுகிறது.) என்ற APPLICATIONஐ INSTALL செய்யவேண்டுமாக இருந்தால்  முதலில் நாம் USB மூலமாக அல்லது BLUETOOTH மூலமாகவோ அந்த APPLICATIONஐ உங்கள் MOBILEல் பதிவு செய்தாபின்னர் சாதரணமாக INSTALL செய்தால் உங்களால்  மேற்கண்ட ERROR MESSAGEஐ பார்க்கலாம்.ஆனால் நீங்கள் பின்வரும் முறையை பின்பற்றி இன்ஸ்டால் செய்வீர்கள் என்றால் உங்களால் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.

               முதலில் நீங்கள் DATE AND TIME SETTINGSக்கு செல்லுங்கள் அதில் வருடத்தை 2010என மாற்றம் செய்யுங்கள்.அதாவது DATEஐ பின்னோக்கி செலுத்துங்கள்.பின்னர் நீங்கள் மீண்டும் உங்கள் APPLICATIONஐ இன்ஸ்டால் செய்து பாருங்கள்.இப்போது உங்கள் APPLICATION இம்முறை ஏதும் சிக்கல் இன்றி இன்ஸ்டால் ஆகும்.(INSTALL செய்து முடித்ததும் பழைய நிலைக்கு DATEஐ மாற்றிக்கொள்ளுங்கள்)இது எவ்வாறு நிகழந்தது என்று பார்த்தீர்கள் ஆனால்  BLACKBALLER PRO என்ற இந்த APPLICATION 2010ஆம் வருடத்துடன் முடிவடைகின்றது.நீங்கள் உங்களின் DATE SETTINGஐ பின்னோக்கி செயல் படுத்தும் போது அது தானாக VALIDATE CERTIFICATE ஆக மாறுகின்றது.ஆகையால் உங்கள் APPLICATION தானாக இயங்கும் அனுமதியை இயங்குதளத்திலிருந்து பெறுகின்றது. 

              இப்போது நீங்கள் மீண்டும் MEDIA SAFE என்ற ஒரு APPLICATIONஐ 2010ம் ஆண்டில் வைத்து இன்ஸ்டால் செய்து பாருங்கள் மீண்டும் உங்களால் EXPIRED CERTIFICATEஐ காண முடியும்.நடந்தது என்ன??? மீண்டும் ஒரு பதிவில் பார்ப்போம் தீர்வை...............



download link for BlackBaller Pro
http://gallery.mobile9.com/f/2743363/?ref=2079
media safe download link
http://gallery.mobile9.com/f/332694/




நீண்ட நாள் ஆசை..........................மொபைல் பற்றிய பதிவு.

         தமிழில் கையடக்க தொலைபேசி பற்றிய வலைப்பதிவிட நீண்ட நாள் ஆசை.அது இப்போது நிறைவேற உள்ளதை இட்டு பெருமிதம் கொள்கிறேன்.

         மனித வாழ்கையில் தகவல் தொடர்பு இன்றியமையாதது.பண்டைய மனிதன் முதல் நவீன கால மனிதன் வரை தகவல் தொடர்பு பரிமாரப்பட்டுக்கொண்டிருக்கிறது.பண்டைய கால மனிதன் குகை ஓவியங்கள்,வரையப்பட்ட வரைபடங்கள்,எழுத்து,மலைமேல் தீமூட்டுதல்,பறை வாசித்தல்,புறா மூலம் தூதனுப்புதல்,போன்ற யுக்திகளை கையாண்டான்.இது பின்னர் பரிணாம வளர்ச்சி காரணமாக மேலும் ஓங்கி வளர்ந்தது.

          இந்தப் பரிணாம வளர்ச்சி அலெக்ஸ்சாண்டர் கிரகம்பெல் இன் முயற்சியோடு நிலையான தொலைபேசியாக உருமாற்றம் பெற்றது.இந்த வளர்ச்சி படிப்படியாக முன்னேறி தற்போது கையடக்க தொலை பேசியாக வளர்ந்துள்ளது.

           ஆரம்பத்தில் அழைப்பு மற்றும் குருங்க்செய்திகளுக்கு பயன்பட்ட கைத்தொலைபேசியானது தற்போது பல்வேறு இயங்கு தளங்களுடன் பலதரப்பட்ட சேவைகளுக்காக பயன்படுகிறது.தற்போதுள்ள SYMBIAN இயங்கு தளம் கொண்ட கைத்தொலைபேசியில் விண்டோஸ் இயங்குகிறது என்றால் கூட ஆச்சரியமில்லை.ஆனால் நம்மில் பல பேருக்கு இவற்றை எப்படி செயற்படுத்துவது என்று தெரியாது.இவ்வாறான குறைகளை  நான் இத்தளத்தின் மூலம் நிறைவு செய்ய ஆசைப்படுகிறேன்.

           நான் இத்தளத்தில் தற்போது அதிகமாக பலரால் பயன்படுத்தப்படுகின்ற  இயங்கு தளங்களான ANDROID,SYMBIAN தளங்களை பற்றி நான் அனுபவரீதியாக கண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்டுள்ளேன்.ஆகையால் எனக்கு உக்கம் தந்து உதவுமாறு உங்களிடம் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய பதிவுகளில் ஏதேனும் குறை நிறை  இருந்தால் சுட்டிக்காட்டும் படி உங்களிடம் வினவிக்கொள்கிறேன்.உங்கள் விமர்சனங்களை AbdullahAzam29@Gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு மின் அஞ்சல் மூலமாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் கருத்துக்களை நான் இத்தளத்தின் மூலம் எதிர்பார்கின்றேன்.





உங்கள் நண்பன்
ABDULLAHAZAM