செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

நீண்ட நாள் ஆசை..........................மொபைல் பற்றிய பதிவு.

         தமிழில் கையடக்க தொலைபேசி பற்றிய வலைப்பதிவிட நீண்ட நாள் ஆசை.அது இப்போது நிறைவேற உள்ளதை இட்டு பெருமிதம் கொள்கிறேன்.

         மனித வாழ்கையில் தகவல் தொடர்பு இன்றியமையாதது.பண்டைய மனிதன் முதல் நவீன கால மனிதன் வரை தகவல் தொடர்பு பரிமாரப்பட்டுக்கொண்டிருக்கிறது.பண்டைய கால மனிதன் குகை ஓவியங்கள்,வரையப்பட்ட வரைபடங்கள்,எழுத்து,மலைமேல் தீமூட்டுதல்,பறை வாசித்தல்,புறா மூலம் தூதனுப்புதல்,போன்ற யுக்திகளை கையாண்டான்.இது பின்னர் பரிணாம வளர்ச்சி காரணமாக மேலும் ஓங்கி வளர்ந்தது.

          இந்தப் பரிணாம வளர்ச்சி அலெக்ஸ்சாண்டர் கிரகம்பெல் இன் முயற்சியோடு நிலையான தொலைபேசியாக உருமாற்றம் பெற்றது.இந்த வளர்ச்சி படிப்படியாக முன்னேறி தற்போது கையடக்க தொலை பேசியாக வளர்ந்துள்ளது.

           ஆரம்பத்தில் அழைப்பு மற்றும் குருங்க்செய்திகளுக்கு பயன்பட்ட கைத்தொலைபேசியானது தற்போது பல்வேறு இயங்கு தளங்களுடன் பலதரப்பட்ட சேவைகளுக்காக பயன்படுகிறது.தற்போதுள்ள SYMBIAN இயங்கு தளம் கொண்ட கைத்தொலைபேசியில் விண்டோஸ் இயங்குகிறது என்றால் கூட ஆச்சரியமில்லை.ஆனால் நம்மில் பல பேருக்கு இவற்றை எப்படி செயற்படுத்துவது என்று தெரியாது.இவ்வாறான குறைகளை  நான் இத்தளத்தின் மூலம் நிறைவு செய்ய ஆசைப்படுகிறேன்.

           நான் இத்தளத்தில் தற்போது அதிகமாக பலரால் பயன்படுத்தப்படுகின்ற  இயங்கு தளங்களான ANDROID,SYMBIAN தளங்களை பற்றி நான் அனுபவரீதியாக கண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவல் கொண்டுள்ளேன்.ஆகையால் எனக்கு உக்கம் தந்து உதவுமாறு உங்களிடம் அன்பாய் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய பதிவுகளில் ஏதேனும் குறை நிறை  இருந்தால் சுட்டிக்காட்டும் படி உங்களிடம் வினவிக்கொள்கிறேன்.உங்கள் விமர்சனங்களை AbdullahAzam29@Gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு மின் அஞ்சல் மூலமாக எனக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் கருத்துக்களை நான் இத்தளத்தின் மூலம் எதிர்பார்கின்றேன்.





உங்கள் நண்பன்
ABDULLAHAZAM






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக