புதன், 15 ஆகஸ்ட், 2012

EXPIRED CERTIFICATE பதிவு 2

               கடந்த பதிவில் EXPIRED CERTIFICATE பற்றி ஓரளவு தெரிந்து கொண்டோம்.அதன் பின் நீங்கள் MEDIA SAFEஐ இன்ஸ்டால் செய்து பார்த்து இருந்தீர்கள் என்றால் மீண்டும் உங்களுக்கு EXPIRED CERTIFICATE ERROR செய்தி உங்களுக்கு கிடைத்திருக்கும்.

                நீங்கள் MEDIA SAFE APPLICATIONஐ இன்ஸ்டால் செய்யும் முன்னர் மீண்டும் ஒரு முறை DATE AND TIMEல் மாற்றம் செய்து பாருங்கள்(அதாவது ஒவ்வொரு ஆண்டாக பின்னோக்கி இன்ஸ்டால் செய்து பாருங்கள்.2009/2008/2007)உங்களால் இப்போது இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

                  ஆம் நீங்கள் 2007ஆம் ஆண்டுக்கு மாற்றம் செய்தவுடன் உங்களுக்கு MEDIA SAFEஐ இன்ஸ்டால் செய்யும் ACCESS கிடைக்கும்.மீண்டும்அதற்கான கரணம் என்ன வென்று ஆராய்ந்தீர்கள் என்றால் சில விடயங்கள் உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.அதாவது MEDIA SAFEஇன் LICENCE VERIFICATION 2007ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.நீங்கள் உங்கள் DATEஇல் மாற்றம் செய்தவுடன் உங்களுக்கான அனுமதியை இயங்குதளம் அளிக்கின்றது.கீழ் உள்ள வீடியோ பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
               இதே போன்று பலதரப்பட்ட APPLICATIONகள் EXPIRED CERTIFICATEஉடன் இணையத்தில் உலவுகின்றன இவற்றை நீங்கள்  தரவிறக்கம் செய்து  DATEஐ மாற்றம் செய்யும் முறை மூலம் INSTALL செய்து கொள்ள முடியும்.(ஆனால் DATE ஐ மாற்றாமல் இன்ஸ்டால் செய்யும்  நிரந்தர தீர்வும் உண்டு.அது பற்றி தனி ஒரு பதிவில் பேசுவோம்.)

           இப்போது நீங்கள் 2007ஆம் ஆண்டுக்கு DATEஐ மாற்றம் செய்த பிறகு மீண்டும் ஒருமுறை BLACKBALLER PROவை இன்ஸ்டால் செய்து பாருங்கள் உங்களுக்கு மேற்கண்ட படத்தில் உள்ளது போன்று ஒரு செய்தி தோன்றும்.இதற்கான தீர்வைப்  பற்றி அடுத்த பதிவில் பேசுவோம் 

BLACKBALLER PRO


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக